Music composer: Deva
Singers: K.S.Chitra and Male singer (unknown, please someone let me know)
Lyricist: ???
Starring: R. Parthiban, Rachana Banerjee
Lyrics in Tamil:
குக்குகூகூ குக்குகூகூ
குயில் பாட்டு கேக்குது
குயில் பாட்டை குளிர் காற்று செவியோரம் சேர்க்குது
அடி சின்ன மணிக்குயிலே, எந்தன் சிந்தை மயங்குது பார்
இந்த சிந்து படித்திடத்தான் இங்கு சொல்லி கொடுத்தது யார்
இசை தேன் வந்து தேன் வந்து பாயுது பாயுது குயிலே
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர தீம் திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர தீம்
விண்ணை விட்டு நிலத்தில் இறங்கிடும்
மண்ணை தொட்டு நடனம் புரிந்திடும்
தூறல் மழை துளியை தெளித்திடும் ஈர முகிலே
பச்சை பயிர் உலகில் தழைப்பதும்
பட்ட மரம் திரும்ப கிளைப்பதும்
தாகங்களை நொடியில் தணிப்பதும் உங்கள் செயலே
எந்த வேருக்கும் நீர்விடும் மனது
இங்கு யாருக்கும் வாய்ப்பது அரிது
அம்மம்மா...
மக்கள் தாகங்கள் தீர்ந்திட
பாடடி பாடடி குயிலே
(தீம்த...)
தென்பொதிகை மடியில் பிறந்தவள்
தென்மதுரை நகரில் புகுந்தவள்
செந்தமிழர் உணர்வில் கலந்தவள் தென்றல் மகளே
உன்னை இங்கு தடுக்க முடியுமா?
ஆணை இட்டு ஒடுக்க முடியுமா?
கூட்டுக்குள்ளே அடைக்க முடியுமா? சொல்லு மகளே
இந்த பெண்ணினம் அப்படி இருக்கும்
இது உன்னினம் என்பதை நினைக்கும்
அம்மம்மா......
பெண்மை வாழ்கின்ற வாழ்வென்று
பாடடி பாடடி குயிலே
(தீம்த...)
குக்குகூகூ குக்குகூகூ
குயில் பாட்டு கேக்குது
குயில் பாட்டை குளிர் காற்று செவியோரம் சேர்க்குது
அடி சின்ன மணிக்குயிலே, எந்தன் சிந்தை மயங்குது பார்
இந்த சிந்து படித்திடத்தான் இங்கு சொல்லி கொடுத்தது யார்
இசை தேன் வந்து தேன் வந்து பாயுது பாயுது குயிலே
(தீம்த...)
Lyrics in English:
Kukku Kooku Kukku Kooku
Kuyil paatu kekkuthu
Kuyil paattai kulir katru seviyoram serkkuthu
Adi chinna mani kuyile, endhan sindhai mayanguthu paar
Intha sindhu padithida thaan ingu solli kuduthathu yaar
Isai then vanthu then vanthu paayuthu paayuthu
Theemtha theemtha thiraana thira
Theemtha theemtha thiraana thira
Theemtha theemtha thiraana thira theem thira
Theemtha theemtha thiraana thira
Theemtha theemtha thiraana thira
Theemtha theemtha thiraana thira theem
(Theemtha)
Vinnai vittu nilathil irangidum
Mannai thottu nadanam purinthidum
Thooral mazhai thuliyai thelithidum eera mugile
Pachai payir ulagil thazhaipathum
Patta maram thirumba kilaippathum
Thagangalai nodiyil thanippathum ungal seyale
Entha verukkum neervidum manathu
Ingu yaarukum vaaipathu arithu
Ammamma.......
Makkal thaagangal theernthida
Paadadi paadadi kuyile....
(Theemtha)
Thenpothigai madiyil piranthaval
Thenmadurai nagaril pugunthaval
Senthamizhar unarvil kalanthaval thendral magale
Unnai ingu thadukka mudiyuma?
Aanai ittu odukka mudiyuma?
Kootukkule adaikka mudiyuma? Sollu magale
Intha penninam appadi irukkum
Ithu unninam enbathai ninaikkum
Ammamma.....
Penmai vaazhgindra vaazhvendru
Paadadi paadadi kuyile....
(Theemtha)
Kukku Kooku Kukku Kooku
Kuyil paatu kekuthu
Kuyil paattai kulir katru seviyoram serkkuthu
Adi chinna mani kuyile, endhan sindhai mayanguthu paar
Intha sindhu padithida thaan ingu solli kuduthathu yaar
Isai then vanthu then vanthu paayuthu paayuthu
(Theemtha)
Male singer
ReplyDeleteKrishnaraj
Unni krishnan I guess
ReplyDeleteநன்றி அண்ணா
ReplyDeleteMy favorite song till nw
ReplyDelete